![]()
இலங்கைக்குள் நுழைய அமெரிக்கா தருணம் பார்த்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜனசெவன பத்திரிகையின் 3 வது வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.சகல இனங்களையும் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் முன் எடுத்துச் செல்லக்கூடியதொரு ஊடகம்தான் தற்காலத்தில் தேவைப்படுகின்றது. நாட்டில் உள்ள சகல ஊடகங்களில் நாளாந்தம் வெளிவருகின்ற செய்திகளும் படங்களும் காட்சிகளும் இனங்களுக் கிடையே குரோத மனப்பான்மையை தோற்றுவிக்கின்றன.
|
இலங்கையில் வெளிவருகின்ற ஊடகங்களில் நாளாந்தம் துஷ்பிரயோகம், கொலை, களவு, பெண் கள் மானபங்கம் மற்றும் இனங்களுக்கிடை யிலான ஐக்கியத்தை குழப்புகின்ற செய்திகளையே காணக்கூடியதாக உள்ளது. இச் செய்திகளை நாளாந்தம் வாசிக்கும் அல்லது தொலைக்காட்சிகளில் அவதானிக்கும் பொதுமக்களின் மனோநிலை பாதிக்கப்படுகின்றது.சமூகங்களை ஐக்கியப்படுத்தி நல்லதொரு மானிட சமூகத்தை கட்டியெழுப்பும் ஊடகமே தற்காலத்தில் தேவைப்படுகின்றது.
கடந்த வாரம் நான் வெளிநாட்டில் தங்கியிருந்தேன். லண்டனில் கிறிஸ்தவர்கள் முஸ்லிம் பள்ளிவாசல்களை உடைத்தார்கள். ஆனால் அந்த நாட்டில் எந்தவொரு ஊடகமும் அதனை செய்தியாக வெளியிடவில்லை. அந்த செய்திகளுக்கு அந்த நாட்டில் உள்ள பீ. பீ. சி., சி. என். என்., அல் ஜசீரா முக்கியத்துவம் கொடுக்கவில்லை ஆனால் இலங்கையில் சிறு நிகழ்வுக்கு பாரிய முக்கியத்துவும் கொடுக்கின்றது.
இன்று சிலர் மீண்டுமொரு சிங்கள - முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்துவதற்கே முயற்சிக்கின்றனர். இவ்வாறானதொரு நிகழ்வின் பின்னணியில் அமெரிக்கா நாட்டுக்குள் வர தருணம் பார்த்துக்கொண்டுள்ளது. அதே போன்று மியன்மாரில் பெளத்த முஸ்லிம் கலவரத்தின் பின்னர் அந்த நாட்டில் அமெரிக்கா காலடி எடுத்து வைத்துள்ளது. எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
|
0 comments