
கிளிநொச்சியில், பழைய வைத்தியசாலை முன்பாக இடம்பெற்ற ஹயேஸ் வான் மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே மரணமானார். மரணமடைந்தவரின் உடல் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள போதும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments