![]()
ஈரான் மீது, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக கிழக்கில் மின் விநியோகத் திட்டங்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளதாக மின்வலு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குற்றம்சாட்டியுள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பதிலளித்த அவர், கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவிருந்த கிராமிய மின்வழங்கும் திட்டங்களுக்கு ஈரான் நிதி வழங்க முன்வந்திருந்தது.
|
ஆனால், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத தடையால், கிழக்கு மாகாண கிராம மின் வழங்கும் திட்டங்களை செயற்படுத்துவதற்கு தேவையான மின் உபகரணங்கள் மற்றும் பொருட்களை ஈரானிடமிருந்து கொள்வனவு செய்ய முடியாதுள்ளது என்று தெரிவித்துளார்.
|
0 comments